< Back
மாநில செய்திகள்
மது விற்ற 3 பேர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
18 Oct 2023 1:00 AM IST

நெகமம் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெகமம் பகுதியில் நெகமம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கரப்பாடி பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்த கோட்டாம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். வடசித்தூர் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில் விற்பனை செய்து கொண்டு இருந்த ஆவுடையார்கோவிலை சேர்ந்த மணிவண்ணன் (30) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 135 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். காட்டம்பட்டி -வடசித்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கூடுதல் விலைக்கு மது பாடல்கள் விற்பனை செய்து கொண்டு இருந்த ஆவுடையார்கோவிலை சேர்ந்த கோட்டைச்சாமியை கைது செய்து, அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்