< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
மது விற்ற 3 பேர் கைது
|6 Aug 2023 3:45 AM IST
கிணத்துக்கடவு பகுதியில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக போலீசாருக்க ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ஏலூர், சிக்கலாம் பாளையம், கிணத்துக்கடவு சுடுகாடு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுக்கி வைத்து மதுவிற்பனை செய்த திருவாடனையை சேர்ந்த சாம்சுந்தர் (வயது 30), கோட்டைசாமி (32) மற்றும் புதுக்கோட்டை அருகே உள்ள மணல்மேல்குடியை சேர்ந்த பார்த்திபன் (27) ஆகியோரை கைது செய்தனர்.