< Back
மாநில செய்திகள்
திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
26 Oct 2022 1:52 PM IST

வண்டலூர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போல கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. ரோடு டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த 3 சம்பவங்கள் குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்