< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்களை பதுக்கிய 3 பேர் கைது
|31 July 2022 2:17 PM IST
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பவர்களை பிடிக்க தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் படப்பை ஆதனஞ்சேரியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 34), கூடுவாஞ்சேரி வள்ளுவர் காலனியை சேர்ந்த ஜான் கென்னடி, ( 37) மற்றும் சோமங்கலம் நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமசாமி (56), ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அரசால் தடை செய்யப்பட்ட 165 கிலோ எடை கொண்ட புகையிலை மற்றும் பாக்கு பொருட்களை அவர்கள்அவர்களிடமிருந்து போலீசார் கைப்பற்றினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.