< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
|2 Aug 2022 6:39 PM IST
தட்டார்மடம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்:
தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்ஷன் மற்றும் போலீசார் நேற்று மதியம் முதலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராஜமன்னார்புரம் அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடியதாக, சுப்பிரமணியபுரம் கனகராஜ் மகன் செல்வ ஆசீர், விஜயராமபுரம் சிவசுப்பிரமணியன் மகன் கதிரேசன், முதலூர் இசக்கி மகன் முருகேசன் ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர்.