< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
|4 Oct 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அலெக்ஸ் இமானுவேல்(வயது 62), சேது(26), ஜான் பிரிட்டோ(50) ஆகியோரை கைது செய்தனர்.