< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மண் அள்ளிய 3 பேர் கைது
|13 Jun 2023 12:15 AM IST
கடையம் அருகே மண் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையம் அருகே தோரணமலை அடிவார பகுதியில் செங்கல் சூளை அருகே மண் அள்ளுவதாக கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அந்த பகுதிக்கு சென்றார். அங்கு அனுமதி இன்றி பொக்லைன் எந்திரம், டிராக்டர், டிப்பர் லாரி மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மண் அள்ளிய மாதாபுரத்தை சேர்ந்த குரு பிரசாத், நாட்டார்பட்டியை சேர்ந்த அய்யாதுரை, மேற்கு வங்கத்தை சேர்ந்த கோலன் சர்தார் ஆகிய மூன்று பேரை கைது செய்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரம், டிராக்டர், டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.