< Back
மாநில செய்திகள்
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
சென்னை
மாநில செய்திகள்

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
7 March 2023 1:20 PM IST

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை பெரியமேடு சூளை ரவுண்டானா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 2020-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் நண்பரான பாலு (வயது 26) உள்ளிட்ட 3 பேர் மணிகண்டனிடம் மது அருந்த பணம் கேட்டனர். மணிகண்டன் பணம் கொடுக்காமல் அவர்களை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக 13.3.2020 அன்று சூளை ரவுண்டானா பஸ் நிறுத்தம் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மணிகண்டனை பாலு, தங்கா (39), ஹேமநாதன் (33) ஆகியோர் கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலு உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பாலு உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்