< Back
மாநில செய்திகள்
3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

தினத்தந்தி
|
28 Sept 2023 12:15 AM IST

சீர்காழி அருகே இடப் பிரச்சினையில் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராதாநல்லூர் இளையமதுகூடம் கிராமம் பட்டவெளி தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55), இவருக்கும் அதே பகுதி பூசாரி தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (60) , ஆனந்த் (50), செந்தில்குமார் (50) ஆகியோருக்கு இடையே இடப் பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு கலியமூர்த்தி, ஆனந்த், செந்தில்குமார் ஆகிய மூவரும் ராஜகோபால் என்பவரின் கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மும்தாஜ் நேற்று முன்தினம் குற்றவாளிகளான கலியமூர்த்தி, ஆனந்த், செந்தில்குமார் ஆகிய மூவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து கலியமூர்த்தி, ஆனந்த், செந்தில்குமார் உள்ளிட்ட மூவரையும் திருவெண்காடு போலீசார் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்