< Back
மாநில செய்திகள்
எரிசாராயம் விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு சிறை
விழுப்புரம்
மாநில செய்திகள்

எரிசாராயம் விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு சிறை

தினத்தந்தி
|
27 Sept 2023 12:28 AM IST

எரிசாராயம் விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம் பெரியகாலனி பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு எரிசாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த விஜய் (வயது 30), மணிமாறன் (35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2,250 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புதுச்சேரியில் இருந்து 1,300 லிட்டர் எரிசாராயத்தை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தொடர்பாக புதுச்சேரி மாநிலம் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் (37) என்பவரை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

3 பேருக்கு சிறை

இதுதொடர்பாக விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றம் எண் 1-ல் போலீசார் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குகளில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வன், குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், மணிமாறனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ஞானப்பிரகாசத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இவ்வழக்குகளில் அரசு தரப்பில் வக்கீல் அருண்ராஜா ஆஜரானார்.

மேலும் செய்திகள்