< Back
மாநில செய்திகள்
திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்
சேலம்
மாநில செய்திகள்

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்

தினத்தந்தி
|
24 Jun 2023 1:31 AM IST

திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரசாந்த், முத்துசாமி, ரமேஷ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா 1000 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

சங்ககிரி:-

சங்ககிரி அருகே கத்தேரி கிராமம் வளையகாரனூர் குட்டக்காடு பகுதியை சேர்ந்த ஞானசேகரன் (வயது 35). இவர், சொந்தமாக லாரி ஓட்டி வருகிறார். இவர், ஐதராபாத்தியில் இருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு கேரளா சென்ற போது சங்ககிரி அருகே வளையகாரனூர் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி இருந்தார். அப்போது மர்மநபர்கள், ஞானசேகரனை தாக்கி அவரிடம் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாய், செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர்.

இதுதொடர்பாக தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோபாஜி நகரைச் சேர்ந்த பிரசாந்த் (33), முத்துசாமி (34), ரமேஷ் (36) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு,திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரசாந்த், முத்துசாமி, ரமேஷ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா 1000 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்புகூறினார்.

மேலும் செய்திகள்