< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மழைநீர் வடிகால் பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் படுகாயம் - ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
|24 Sept 2022 6:51 PM IST
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டிய போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை,
சென்னை ஐ.சி.எஃப். சிக்னல் அருகே மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் விழுப்புரத்தைச் சேர்ந்த அருண்குமார், கொளத்தூரைச் சேர்ந்த கண்ணன், அரக்கோணத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் 3 பேரும் மயக்கமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் பார்த்தசாரதி, மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், ஜே.சி.பி. ஓட்டுநர் ஜெயபாலன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.