< Back
மாநில செய்திகள்
தலைகுப்புற கார் கவிழ்ந்து 3 பேர் காயம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தலைகுப்புற கார் கவிழ்ந்து 3 பேர் காயம்

தினத்தந்தி
|
18 Aug 2023 1:00 AM IST

வேடசந்தூர் அருகே தலைகுப்புற கார் கவிழ்ந்து 3 பேர் காயம் அடைந்தனர்.

கரூர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவரது மனைவி விமலா (55), மகன் மோகன் (30). இவர்கள் 3 பேரும் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை மோகன் ஓட்டினார். வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டியில், திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வந்தபோது காரின் முன்பக்க டயர் ஒன்று வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்