திருச்சி
நர்சுஉள்ட 3 பேர் மாயமாார்கள்
|nurseநர்சு
திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டையன் பேட்டை பகுதியை சேர்ந்த சண்முகம்-பூங்கொடி என்பவரின் மகள் ராஜேஸ்வரி (19). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணியாற்றி வருகிறார். வேலைக்கு சென்று விட்டு வருவதாக இரவு நேரத்தில் கிளம்பி சென்ற ராஜேஸ்வரி அதன் பின் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி பாத்திமா (36). பாத்திமா கல்யாண வீடுகளில் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் திரும்பி வரவில்லை.இதுகுறித்து அவரின் மகன் சூர்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மணிகண்டம் அருகே உள்ள மட்டைபாறைப்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் விசித்திரா (22). பட்டதாரியான இவர் விராலிமலையில் உள்ள தனியார் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இவர் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Story Images
Spotlight Image
Thumb Image
Medium Size Image
Top Image