< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
20 Aug 2022 1:24 AM IST

நெல்லையில் கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

நெல்லையில் கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள்

நெல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் 2 சிறுவர்கள் சந்தேகப்படும் படியாக நின்றனர். அவர்களை பிடித்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது 16 வயதான 2 சிறுவர்களும் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 50 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இதேபோன்று பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும் படியாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர் மேலப்பாளையம் ஆலீம் நகரைச் சேர்ந்த சேக் ஜமால் மைதீன் (22) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்