< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் மோதி பள்ளி மாணவி உள்பட 3 பேர் காயம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

அரசு பஸ் மோதி பள்ளி மாணவி உள்பட 3 பேர் காயம்

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி பள்ளி மாணவி உள்பட 3 பேர் காயம் போலீசார் விசாரணை

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லை வாசலில் இருந்து நேற்று மாலை பயணிகளோடு சீர்காழி நோக்கி அரசு பஸ் வந்தது. திருமுல்லைவாசல் டாஸ்மாக் அருகில் வரும்பொழுது ஒருவர் மோட்டார் சைக்கிளில் திடீரென சாலையின் குறுக்கே கடந்ததால் நிலை தடுமாறி அரசு பஸ் சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பஸ்சில் பயணம் செய்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி பிரியா (வயது 17), இதேபோல் சாலையோரம் நின்று கொண்டிருந்த விழுதலைக்குடியை சேர்ந்த அமிர்தலிங்கம் (52), வருஷபத்தை சேர்ந்த பரசுராமன் (64) உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்