< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்
|1 Oct 2023 5:45 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
நத்தம் அருகே உள்ள எல்.வலையப்பட்டியை சேர்ந்தவர் அழகன் (வயது 75). நேற்று இவர், தனது மனைவி அழகுநாச்சி (70), பேரன் லோகேஷ்வரன் (16) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வேம்பரளிக்கு சென்றுவிட்டு எல்.வலையப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். மதுரை-நத்தம் நெடுஞ்சாலையில் வலையப்பட்டி பிரிவு அருகே வந்த போது, அந்த வழியாக மதுரையில் இருந்து நத்தம் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அழகன் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.