< Back
மாநில செய்திகள்
நாய் கடித்ததில் குழந்தை உள்பட 3 பேர் காயம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

நாய் கடித்ததில் குழந்தை உள்பட 3 பேர் காயம்

தினத்தந்தி
|
27 Aug 2023 1:39 AM IST

நாய் கடித்ததில் குழந்தை உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

பேராவூரணி அருகே கொன்றைக்காடு மேற்கு பகுதியை சேர்ந்த கரிகாலன்- ராதிகா தம்பதியின் மகள் அஸ்மிதா (வயது3). சம்பவத்தன்று அஸ்மிதாவை அவருடைய பாட்டி ராஜம்மாள் கையில் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த நாய் ராஜம்மாளின் காலில் கடித்தது. இதில் நிலை தடுமாறி ராஜம்மாள் கீழே விழுந்தார். அப்போது அஸ்மிதாவின் கையில் வெறிநாய் பலமாக கடித்து குதறியது. இருவருடைய அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடி வந்த திருப்பதி என்பவரையும் நாய் கடித்தது. அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் அஸ்மிதா மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்