< Back
மாநில செய்திகள்
வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு- சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்
மதுரை
மாநில செய்திகள்

வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு- சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
24 May 2023 1:58 AM IST

வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டியை சேர்ந்தவர் காளி (வயது 20). சம்பவத்தன்று இவர் புதூர் மாட்டுத்தாவணி 120 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கி அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி புதூர் சம்பக்குளத்தை சேர்ந்த சக்திவேல் (22), பாண்டி (23) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மலைச்சாமி என்பவரை தேடி வருகிறார்கள்.

மதுரை தமிழ்சங்கம் ரோடு மணிநகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (33). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது அவரது செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார். அவரை விரட்டி சென்று பிடித்து திலகர்திடல் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஆண்டிப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (26) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்