< Back
மாநில செய்திகள்
தனித்தனி விபத்தில் 3 பேர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

தனித்தனி விபத்தில் 3 பேர் பலி

தினத்தந்தி
|
16 Sept 2022 12:39 AM IST

தனித்தனி விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மயிலம்,

மயிலம் அருகே செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது52), கொத்தனார். இவர் செண்டூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்தி விட்டு மீண்டும் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேபோல் பாதிராபுலியூர் கிராமத்தை சேர்ந்த சுக்ரீவன் மனைவி சோலையம்மாள் (62) என்பவா் பாதிராபுலியூர் சுடுகாட்டு பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் பரிதாபமாக இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவா் ராமசாமி (52), இவர் விளங்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் போில் மயிலம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்