விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு..!
|விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் 16 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எக்கியார் குப்பம் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்த சம்பவம் மரக்காணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.