< Back
மாநில செய்திகள்
வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை

தினத்தந்தி
|
12 Aug 2022 12:30 AM IST

ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஓசூர்:-

ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கட்டிட காண்டிராக்டர்

ஓசூர் அருகே பென்னாமடத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 36). கட்டிட காண்டிராக்டரான இவர், கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்து வந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த அ வர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் ஓசூர் ஸ்ரீநகரை சேர்ந்த சரவணன் (45) என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதில் மனம் உடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்

ஓசூர் ஆவலபள்ளியை சேர்ந்தவர் சுதாராணி (29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து சுதாராணி வசித்து வந்தார்.

இதற்கிடையே வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுதாராணி பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலைகள் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்