< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
முன்விரோத தகராறில் 3 பேர் கைது
|8 July 2023 1:00 AM IST
நிலக்கோட்டை அருகே முன்விரோத தகராறில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாரத ரோஜா(36). இவர்களுக்கும், இதே ஊரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜாவுக்கும் (30) வீட்டை காலி செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆனந்தராஜா, குமார்(55), பழனிஅம்மாள் (50), தோப்புசாமி (46) ஆகிய 4 பேரும் கண்ணன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பாரத ரோஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாரத ரோஜா கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தராஜா உள்பட 4 பேர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜா, பழனியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல் ஆனந்தராஜா கொடுத்த புகாரின் பேரில் கண்ணன், பாரத ரோஜா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இதில் பாரத ரோஜாவை கைது செய்தனர்.