தூத்துக்குடி
காரில் ஆடு திருடிய 3 பேர் கைது
|தூத்துக்குடியில் காரில் வந்து ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடு திருட்டு
தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 40). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான ஆடு தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஆட்டை திருடி சென்று விட்டார்களாம். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (33), தூத்துக்குடி அண்ணா நகர் மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த குமரேசன் மகன் மணிகண்டன் (29) மற்றும் அழகேசபுரத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் ராமர் (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆட்டை காரில் திருடிச் சென்றது தெரியவந்தது.
3 பேர் கைது
இதைத் தொடர்ந்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சரவணன், மணிகண்டன், ராமர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.