< Back
மாநில செய்திகள்
டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
13 Oct 2023 1:00 AM IST

நெல்லையில் டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 26). டாக்டரான இவர் கடந்த 7-ந்தேதி நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர், அவரை வழிமறித்து செல்போனை பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து இஸ்மாயில் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செல்போன் திருடியதாக நெல்லை சங்கர்நகரை சேர்ந்த லோகேஷ் ராஜ் (20), மாடசாமி என்ற சிவா (22), பல்லிக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்