< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது
|8 Oct 2023 12:30 AM IST
கூத்தாநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூத்தாநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் போது ஆன்லைன் லாட்டரி விற்ற நாகங்குடி, மேலத்தெருவை சேர்ந்த சரவணன் (வயது39), மரக்கடை, மெயின்ரோட்டு தெருவை சேர்ந்த கண்ணன்(49), பொதக்குடி சதாம் உசேன் தெருவைச் சேர்ந்த செய்யது அன்சாரி(35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.