< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
|29 Jun 2023 12:15 AM IST
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி மீனாட்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை டோக்கன் முறையில் விற்பனை செய்வதாக காரைக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை டோக்கன் முறையில் விற்ற முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராஜகுரு(வயது 44), ஹவுசிங் போர்டு பொன்னுச்சாமி(58), சந்தைப்பேட்டை ராஜசேகர்(63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளின் டோக்கன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.