< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
|29 April 2023 12:15 AM IST
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கம்பாலப்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக ஆழியாறு போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 65) என்பவர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 123 லாட்டரி சீட்டுக்கள், ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் லாட்டரி சீட்டு விற்றதாக முருகன் (56) ,கலைசெல்வன் (54) ஆகியோரை கைது செய்தனர்.