< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
|12 Dec 2022 12:15 AM IST
சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
சிதம்பரம்,
சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் நேற்று சிதம்பரம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சிதம்பரம் சுப்பிரமணிய படையாச்சி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆகாஷ் (வயது 24), ராமச்சந்திரன் மகன் செல்வம் (33), காரிய பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அசோகன் மகன் கிருபாகரன் (24) என்பதும், அவர்கள் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.