< Back
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 6:00 AM IST

கம்பம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், கம்பம் ஏ.எம்.சர்ச். தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற கம்பம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகுபர் சாதிக்கை (வயது 50) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 283 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கம்பம் புதுப்பள்ளி வாசல் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக மியாகன் தெருவை சேர்ந்த லியாகத் அலிகான் (73), நேருஜி தெருவை சேர்ந்த பீர்ஒலி (52) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்