< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
|5 Aug 2023 12:13 AM IST
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தோஷ் தியேட்டர், கொசமேடு, ரவி தியேட்டர் அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற அய்யப்பன் (வயது 49), காளியப்பன் (40), செந்தில்குமார் (43), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.