< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
|14 July 2023 3:06 AM IST
நாகர்கோவிலில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் கிருஷ்ணன்கோவில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்றுக்கொண்டிருந்த வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த அன்புகுமரன், அறுகுவிளையைச் சேர்ந்த மணிகண்டன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.24 ஆயிரத்து 700 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.