< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
2 May 2023 12:15 AM IST

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா்.


விழுப்புரம் அருகே தெளி பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த காணை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் மற்றும் காணை மாதா கோவில் தெருவை சேர்ந்த பிரட்லி (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 20 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (22) என்பவரை மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 15 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்