< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
27 Dec 2022 12:15 AM IST

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடசேரி:

நாகா்கோவில் வடசேரி போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையம் முன் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தெற்கு சூரங்குடியை சேர்ந்த ரியாஸ் கான் (வயது 24), முகமது ரியாஸ் (23) மற்றும் முகமது அல்தாப் (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1.700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இந்த கஞ்சா விற்பனையில் முகமது ஷெரிக் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்