< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
28 Oct 2022 2:50 AM IST

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

திசையன்விளை:

உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உவரி பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக உடன்குடி தேரியூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 19), அதே ஊரைச் சேர்ந்த ராமன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கஞ்சா மொத்த வியாபாரி தேரியூரை சேர்ந்த நயினார் மகன் வாலிபர் குருசாமியை (21) உவரி போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்