< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
|8 July 2022 2:27 AM IST
கஞ்சா விற்ற 3 பேர் கைது
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி மற்றும் போலீசார் நேற்று பெட்டைக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்த கைலாசபுரம் நடுத்தெரு முத்துராஜா (வயது 28) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.