சேலம்
லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது
|கொண்டலாம்பட்டி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொண்டலாம்பட்டி:-
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுண்டக்காபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு குஜராத்தில் இருந்து சரக்குடன் ஓட்டி வந்த டாரஸ் லாரியை அமானி கொண்டாம்பட்டி பகுதியில் நிறுத்தினார். பின்னர் தன்னுடன் வந்த இன்னொரு டிரைவர் விவேக்கை டீ வாங்கி வரும்படி கூறிவிட்டு சதீஷ் மட்டும் லாரியில் படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் இரும்பு ராடால் சதீஷை தாக்கி விட்டு அவரிடமிருந்து ரூ.1,500. மற்றும் செல்போனையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது, மூணாங்கரட்டை சேர்ந்த பிரவீன் குமார் (23), சித்தர் கோவில் ரோடு திருமலைகிரியை சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (22) மற்றும் எருமாபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (37) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், செல்போன் மீட்கப்பட்டன.