< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
|3 May 2023 11:56 PM IST
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம், மே.4-
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே ஸ்கூட்டரில் வேகமாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் காஞ்சீபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 34), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜசேகர் (32), தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கனவேனி மகேஷ் (27) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்து தெரியவந்து. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.