< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

தினத்தந்தி
|
21 Nov 2022 9:59 PM IST

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக்கிற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் குமார் மற்றும் போலீசார் சம்பவ பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எஸ்.ஆர்.கேட் அருகே இருந்த புதரில் மறைந்து இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அரக்கோணம் கிருஷ்ணாம் பேட்டையை சேர்ந்த ஜிந்தா டேவிட் என்கிற ராஜ்குமார் (48), அசோக் நகரை சேர்ந்த கிரண் (19), பெரியார் நகரை சேர்ந்த யோகேஸ்வரன் (21) என்பதும் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்