< Back
மாநில செய்திகள்
கும்பகோணத்தில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை - 3 பேர் கைது
மாநில செய்திகள்

கும்பகோணத்தில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை - 3 பேர் கைது

தினத்தந்தி
|
24 Aug 2024 10:00 PM IST

கும்பகோணத்தில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மேலக்காவேரி பகுதியில் வசிக்கும் சையத் இப்ராகிம் என்பவர், போலி மதுபான ஆலை நடத்தி வருவதாகவும், மது பாட்டில்களில் போலி மதுபானத்தை அடைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், போலி மதுபானம் அடைக்கப்பட்ட மது பாட்டில்களை கைப்பற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சில்லறை விற்பனையில் மட்டும் ஈடுபட்டார்களா? அல்லது கும்பகோணத்தில் இயங்கும் பார்களுக்கும் போலி மதுபானங்களை விற்பனை செய்தார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்