< Back
மாநில செய்திகள்
கணினி திருடிய 3 பேர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கணினி திருடிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
14 Sept 2023 2:41 AM IST

கபிஸ்தலம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கணினி திருட்டு

கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றுபவர் சுகுணா. கடந்த 10-ந்தேதி இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து பொருட்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் அலுவலகத்தை பூட்டாமல் சென்று விட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த கணினி மற்றும் தளவாட பொருட்களை திருடி சென்று விட்டனர்.

மறுநாள் வேலைக்கு வந்த ஊராட்சி செயலாளர் சுகுணா அலுவலகத்தில் கணினி, தளவாட பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் சுகுணா புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.

இதில் தொடர்புடைய ராமானுஜபுரம் தோப்பு தெருவில் வசிக்கும் மதியழகன் மகன் மணிமாறன் (வயது26), உமையாளன் மெயின் ரோட்டை சேர்ந்த கர்ணன் மகன் ரமேஷ்(37) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினி மற்றும் தளவாட பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கணினி, தளவாட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்