< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்

ஊட்டி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
14 April 2023 12:15 AM IST

ஊட்டி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி

ஊட்டி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளச்சாராயம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்று வட்டார பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி சட்ட விரோதமாக இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாகவும், சில நேரங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகும் தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தும்மனட்டி மதுரை வீரன் காலனி பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் சந்தேகத்திற்கிடமான வகையில் இங்கு தொழில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

3 பேர் கைது

அப்போது அங்கு இருந்த ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வீட்டில் இருந்த 3 பேரை மடக்கி பிடித்து, கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 51), வெள்ளியங்கி (41), செல்வன் (63) என்பது தெரியவந்தது. இதன் பின்னர் அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பானைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்