< Back
மாநில செய்திகள்
குன்றத்தூரில் வக்கீலை தாக்கிய 3 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூரில் வக்கீலை தாக்கிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
7 April 2023 3:20 PM IST

குன்றத்தூரில் வக்கீலை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குன்றத்தூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் சைமன் ராஜ் (46), இருவரும் நேற்று முன்தினம் குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு இருந்த காலி பாட்டிலை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த தியாகு, ராமு, ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் குன்றத்தூர் நகர மன்ற அ.தி.மு.க. உறுப்பினர் ராஜா உட்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்

மேலும் செய்திகள்