பெரம்பலூர்
நண்பரை தாக்கிய 3 பேர் கைது
|நண்பரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவரும், அதே பகுதியை சேர்ந்த கவுதமன் (19), வெண்பாவூரை சேர்ந்த மதிவாணன் (25), சிறுகுடலை சேர்ந்த வெங்கடேசன் (27) ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் 4 பேரும் பெரியவடகரையில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சுரேசை மதிவாணன், கவுதமன், வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுரேசை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கவுதமன், மதிவாணன், வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.