< Back
மாநில செய்திகள்
பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேர் கைது
தென்காசி
மாநில செய்திகள்

பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
15 April 2023 2:06 AM IST

கடையத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடையம்:

கடையம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை நிறுத்த வலியுறுத்தி, கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், அவருடைய சகோதரர் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நேற்று தங்களது குழந்தைகளுடன் கடையம் சின்னத்தேர் அருகில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

இதற்கு அனுமதி மறுத்த போலீசார், உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற பூமிநாத், சந்திரசேகர், கீழக்கடையத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

முன்னதாக பூமிநாத், சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தபோது அவர்களுடைய குழந்தைகள் 3 பேரும் கதறி அழுதனர். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் ஆறுதல் கூறி பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தார்.

மேலும் செய்திகள்