திருநெல்வேலி
3 பேர் கைது
|தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
ராதாபுரம்:
திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, திருக்குறுங்குடி பகுதிகளில் கோவில்களில் தொடர்ந்து உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகார்களின் பேரில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குமரி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்த தேவராஜ் மகன் ஆண்டனி ராஜ் (வயது 28), நெல்லை மாவட்டம் காவல்கிணறு கிருஷ்ணமூர்த்தி மகன் நாகராஜன் (39) மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகியோர் என்பதும், கோவில்களில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.