திருநெல்வேலி
350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
|350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
பணகுடி:
பணகுடி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமயசிங் மீனா தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த கடையை கண்காணித்தனர். இந்த நிலையில் நேற்று அந்த கடைக்கு திசையன்விளையை சேர்ந்த ஜெல்டன், மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த முத்துசெல்வன் மற்றும் செல்லதுரை ஆகியோர் புகையிலை விற்பனை செய்ய வந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் தனிப்படை போலீசார் புகையிலை வாங்குவது போல் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரி பகுதியில் ஒரு வீட்டில் புகையிலையை வைத்திருப்பதாக கூறினர். இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜெல்டன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.