< Back
மாநில செய்திகள்
3 பெண்டாட்டிக்காரர் விஷம் குடித்து தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

3 பெண்டாட்டிக்காரர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
27 Jun 2022 1:28 AM IST

மேச்சேரி அருகே 3 பெண்டாட்டிக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேச்சேரி:மேச்சேரி அருகே 3 பெண்டாட்டிக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேச்சேரி அருகே பானாபுரம் ஊராட்சி வீரப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. (வயது 70). தொழிலாளி. இவருக்கு 3 முைற திருமணம் நடைபெற்று 3 மனைவிகளும் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வந்தார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சேட்டு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்