< Back
மாநில செய்திகள்
சென்னிமலை அருகே  கீழ்பவானி வாய்க்காலில் 3 புதிய பாலங்கள்  தண்ணீர் திறப்புக்குள் கட்டி முடிக்க பணிகள் தீவிரம்
ஈரோடு
மாநில செய்திகள்

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் 3 புதிய பாலங்கள் தண்ணீர் திறப்புக்குள் கட்டி முடிக்க பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
8 July 2023 8:48 PM GMT

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்புக்குள் 3 புதிய பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்புக்குள் 3 புதிய பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழுதடைந்த பாலங்கள்

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே அய்யம்பாளையம் மண்ணாங்காடு, எல்லை குமாரபாளையம், எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுவலசு ஆகிய இடங்களில் இருந்த பாலங்கள் மிகவும் பழுதடைந்துவிட்டன. இந்த பாலங்கள் வழியே தினமும் அரசு டவுன் பஸ்கள் சென்று வந்தன. மேலும் கரும்பு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் அதிக அளவில் சென்று வந்ததால் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டன.

இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே இருந்த அய்யம்பாளையம் மண்ணாங்காடு வாய்க்கால் பாலம் மற்றும் எல்லை குமாரபாளையம் வாய்க்கால் பாலம் ஆகியவற்றை நெடுஞ்சாலை துறையின் மூலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.

பணிகள் தீவிரம்

புதுவலசு வாய்க்கால் பாலம் கட்டும் பணி மட்டும் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

இந்த 3 பாலங்களும் ஏற்கனவே இருந்த அகலத்தை விட கூடுதல் அகலத்துடன் கட்டப்படுகின்றன. அடுத்த மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும். அதற்குள் பாலம் கட்டும் பணிகளை செய்து முடிக்க தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Tags :
மேலும் செய்திகள்