< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
கொடுங்கையூரில் மரம் விழுந்து 3 மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கியது
|3 May 2023 12:06 PM IST
கொடுங்கையூரில் மரம் விழுந்து 3 மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கியது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக கடத்த மழை பெய்தது. இதில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. இந்த நிலையில் கொடுகையூர் எம்.ஆர்.நகர், 3-வது பிரதான சாலையோரம் நின்ற மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த வழியாக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த இதயவேணி (59) என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்ததால் மோட்டார் சைக்கிள் கடும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி எடுத்து போக்குவரத்தை சரி செய்தனர். நேற்று முன்தினம் பெய்த மழையில் மண் சரிவு ஏற்பட்டதால் மரம் சாய்ந்ததாக தெரிவித்தனர்.